1915.
|
குறங்காட்டு
நால்விரலிற்
கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ்
சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே
தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான்
பூம்புகார்ச் சாய்க்காடே. 10 |
தேவர்க்கும் அவன்
பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்
பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.
கு-ரை:
வையம்-பூமி. மூவடிமண். நீர்-தத்தஞ் செய்நீர். ஏற்றான்-
மாவலிபால் இரந்த திருமால். ஐயன்மார் இருவர்-அயனும் அரியுமாகிய துவி
கர்த்தர்கள். அளப்பு-அளவிடுதல். தையலார்-பெண்டிர். ஓவா-இடைவிடாத.
பேணாதார்-விரும்பி வழிபடாதவர். தெளிவு-ஞானத்தேற்றம். சீலத்தால்
ஞானத்தால் தேற்றத்தால் சென்றகன்ற காலத்தால் ஆராத காதலால்-
ஞாலத்தார் இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாம் கச்சிக்கச் சாலைக்
கனி. எனப் பின்வந்த ஞானப்பாடலை அறிக. தேறோம்-அதை ஒரு
தெளிவாகக் கொள் ளோம், மதி யோம் என்றபடி.
10.
பொ-ரை: தொடைகளில் அடையும் நால்விரல் கோவண
ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக் கூறும் சமண் சாக்கியர்கள்
பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும்
பூம்புகார்ச்ர்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.
கு-ரை:
முதலீரடியும் புறப்புறச்சமயத்தார் நிலையும் செயலும்
பழையபதிப்பாசிரியர் பாடம்: ஓலோவிப்போய் சுவாமி நாத பண்டிதர்
தரும் பாடபேதம் உலாவிப் போய் புதுச்சேரிப் பதிப்பு தரும் பாடம்:
உலோவிப்போய்
|