1916.
|
நொம்பைந்து
புடைத்தொல்கு
நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு
மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த
சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி
யேத்துவார்க் கிடர்கெடுமே. 11
|
திருச்சிற்றம்பலம்
உணர்த்துகின்றன. குறங்கு
ஆட்டும்-துடையில் அசைக்கும். உலோவி-
சிக்கனம்; கொண்டாடி. மெய்யொழுக்கத்தால் உண்டெனத் தோற்றுதல்
இன்றித் தம் பொய்யொழுக்கத்தை நூலாலும் பேச்சாலும் மறைத்து,
தம்மிடத்தில் அறம் உள்ளது போலக் காட்டுதலால் அறம் காட்டும்
என்றார். அலர்-பழி. காட்டல்-காட்டுவதை. கேளாதே-பொருட்படுத்தாமல்
தம்மிற்புணராமை கேளாம்புறன் (சிவஞான போத வெண்பா. 1. உரை)
தெளிவுடையீர் கேளாதே சாய்க்காடே சென்று அடைமின் என்க.
11. பொ-ரை:
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு
பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்
சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய
காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள்
பத்தையும் எமக்குப் பற்றுக் கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை
ஏத்து வார்க்கு இடர்கள் கெடும்.
கு-ரை: நொம்-நோகும். பைந்து-பந்து.
தண்மலர் நறும் பைந்து
ஊழ் அறிந்து உருட்டா (பெருங். மகத 8-64) புடைத்து-(பந்து) அடித்து.
ஒல்கு-தளரும். நூபுரம் - (பாதக்) கிண்கிணி, சிலம்பு. அம்பந்து-அழகிய
பந்து. கழல்-பெண்கள் விளையாடும் கழற்காய். அரவம்-ஓசை. எம்பந்தம்-
எம்முடைய பற்று (க் கோடு). ஏத்துவார்-பாராயணம் புரிபவர்.
|