42.
திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
|
பதிக
வரலாறு:
காழியர் வாழவந்தருளிய
மறைவேந்தர், மொழி வேந்தரொடு
திருக்கடவூர் தொழுது, விரவு நண்புடைய குங்கிலியப் பெருங்கலயர்
திருமனை விருந்துண்டருளித் திருமயானம் பணிந்து, சிலநாள் அமர்ந்து,
மறைப்பெருந் திருக்கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வுடன் அறப்பெரும்
பயன்போன்ற தொண்டர்சூழ இத், திருவாக்கூர்த் தான்றோன்றி மாடத்தை
அணைந்து, அண்ணலைப் போற்றிப் பாடிய செந்தமிழ்த் தொடை
இத்திருப்பதிகம்.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
178 |
|
பதி
எண்: 42 |
திருச்சிற்றம்பலம்
1917.
|
அக்கிருந்த
வாரமும்
ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான்
தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில்
பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 1 |
1.
பொ-ரை:
என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு,
ஆகியனவற்றை ஒருசேர அணிந்த மார்பினனும், திருவெண்ணீறு
அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழமை
யான கோயில், பொய்யில்லாத மெய்ந் நெறியாகிய சைவ சமயத்தைச்
சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி
மாடம் ஆகும்.
கு-ரை:
அக்கு-உருத்திராக்கம். எலும்பும் ஆம். ஆரம்-மாலை,
என்புமாலை, தலைமாலை, கொன்றைமாலை, உருத்திராக்கமாலை
முதலியவற்றுள் முதலும் முடிவும் இங்குப் பொருந்தும். அரவு-பாம்பு,
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பவை
|