1918.
|
நீரார
வார்சடையான்
நீறுடையா னேறுடையான்
காரார்பூங் கொன்றையினான்
காதலித்த தொல்கோயில்
கூராரல் வாய்நிறையக்
கொண்டயலே கோட்டகத்தில்
தாராமல் காக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 2 |
பூண்டு (ப.1.
பா.2) தோலுடையான்-யானைத்தோலும் புலித் தோலுமாகிய
உடையினன். உடையவனுமாம். சைவநெறி பசுபாசக் கலப்பாகிய
பொய்யில்லாதது மட்டுமன்று, சிவத்துவமாகிய மெய்யேயாய் நிற்பது.
கேவலம் சகலம்-பொய். சுத்தம்-மெய், அந்நெறிக்கே தக்கிருந்தார்-
ஆக்கூர்ச் சைவர்கள். (பா.3 வேளாளராகிய தாளாளர் முதலியோர்)
இப்பதிகத்துள் முதற்பத்திலும் ஆக்கூர்ச் சைவர் சிறப்பு உணர்த்துதல்
அறிக.
இது தொல்கோயில்
என ஆசிரியர் காலத்தே விளங் கியது.
அவ்வாறே இன்றும் எண்ணக்கிடக்கின்றது. தான்றோன்றி மாடமே
வெண்ணீற்றான் புக்கு இருந்த தொல்கோயில் என்று கூட்டுக.
பூங்கோயில் (4) என்றும் சொல்லப்படும். இதைத் தரிசித்தவரே இதன்
பெருமை, தொன்மை முதலியவற்றை நன்கு உணர்வர்.
2.
பொ-ரை: கங்கை தங்கிய நீண்ட சடையினனும், திருநீறு
அணிந்தவனும் விடையேற்றை ஊர்தியாகக் கொண்ட வனும், கார் காலத்தே
மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய
பழமையான கோயில் நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய்
நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில் மிகுதியாக வாழும் ஆக்கூரில்
விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.
கு-ரை:
நீர்-கங்கை. ஆர-பொருந்த, நிறைய. வார்-நீண்ட. கார்
ஆர் பூங்கொன்றை-கண்ணி கார்நறுங்கொன்றை. ஆரல்-ஆரல் மீன்களை.
தாரா-நாரையினம். வாய் நிறைய ஆரலைக் கொண்டு அயலே
கோட்டகத்தில் தாராமல்கும் ஆக்கூர் என்று இயைக்க. கோடகம்-நீர்நிலை,
நீர்க்கரை, தான்தோன்றி-சுயம்பு. ஊர்க்கும் திருக்கோயிற்கும் வெவ்வேறு
பெயர் வழங்கிய பழைய மரபை ஈண்டும் காணலாம்.
|