பக்கம் எண் :

553

1919.







வாளார்கண் செந்துவர்வாய்
     மாமலையான் றன்மடந்தை
தோளாகம் பாகமாப்
     புல்கினான் தொல்கோயில்
வேளாள ரென்றவர்கள்
     வள்ளன்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரிற்
     றான்றோன்றி மாடமே.             3
1920.



கொங்குசேர் தண்கொன்றை
     மாலையினான் கூற்றடரப்
பொங்கினான் பொங்கொளிசேர்
     வெண்ணீற்றான் பூங்கோயில்


     3. பொ-ரை: ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம்
போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியை
தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய
சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு
உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும்
ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.

     கு-ரை: வாள் ஆர்-வாள்போன்ற ஒளிபொருந்திய. துவர்-
பவளம். துவர்வாய்-உவமைத்தொகை. மடந்தை-உமா தேவியார். தோள்
ஆகம்பாகமா, (பார்க்க; ப.177 பா.6). புல்கினான்-புணர்ந்தான். வள்ளன்மை-
வள்ளலாந்தன்மை. கொடைமை. தாள்-முயற்சி. தாளாளர்- ஆக்கம் அதர்
வினாய்ச் சாரத்தக்க ஊக்கமுடையர். வேளாளர்- அவ்வாக்கத்தைப் பிறர்க்கு
உபகரிக்கும் வண்மையாளர். வேள்-மண் என்று கொண்டு உழவர் எனலும்
உண்டு. வேளாண்மை-உபகாரம். ‘வேளாண்சிறுபதம்’ (புறம். 74. உரை,)
கொன்றையினான் காதலித்த கோயில் என்றதனால், வேண்டுதல்
வேண்டாமை இல்லாத கடவுளுக்குக் காதல் உண்டென்ற குற்றம்
தோன்றும் எனலாம். ஆயினும் அது பொருந்தாது. அன்பர்க்கு அன்பன்,
அல்லாதார்க்கு அல்லன் என் புழிப் பக்குவாபக்குவங்களைக் காரணமாக்
கொள்ளல் போற் கொள்க. ஆண்டவனுக்கு வேறுபாடில்லை.

     4. பொ-ரை: தேன் பொருந்திய குளிர்ந்த கொன்றை மாலையைச்
சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க திரு