|
அங்கமா
றோடும்
அருமறைகள் ஐவேள்வி
தங்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 4 |
1921.
|
வீக்கினா
னாடரவம்
வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
பாக்கினான் பலகலன்கள்
ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான் தொல்கோயில்
ஆம்பலம்பூம் பொய்கைபுடை
தாக்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 5 |
வெண் ணீற்றை அணிந்தவனும்
ஆகிய சிவபெருமானது அழகிய கோயில்,
அரிய நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை
வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான்
தோன்றி மாடமாகும்.
கு-ரை:
கொங்கு-தேன், மணம், தாது. கூற்று அடர-இயமனை
வருத்த. பொங்கினான்-கோபம் மிகுந்தான். ஆறு அங்கம்-வேதாங்கம்
ஆறும். ஐவேள்வி தங்கினார்-பஞ்ச மகாயக்ஞம் புரிவோர். வேள்வி-யாகம்,
பூஜை. தேவயாகம். பூதயாகம் முதலியன. (பா-7. பார்க்க.)
5.
பொ-ரை: ஆடுகின்ற பாம்பைக் கச்சாக்கட்டியவரும்,
இறந்து அழிந்தவருடைய வெண்டலைகளையும், என்புகளையும் பல
அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப் பெண்ணைக்
கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள்
மலரும் அழகிய பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும்
ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம் ஆகும்.
கு-ரை:
வீக்கினான்-(அரவக்கச்சு) கட்டினான், வீந்து-மாண்டு.
அழிந்தார்-அழிந்தவரது. தலை என்பு-தலையும் எலும்பும். கலன்கள்-
ஆபரணங்கள். ஆதரித்து-விரும்பி. பாகம்-இடப்பால்.
|