1922.
|
பண்ணொளிசேர்
நான்மறையான்
பாடலினோ டாடலினான்
கண்ணொளிசேர் நெற்றியினான்
காதலித்த தொல்கோயில்
விண்ணொளிசேர் மாமதியந்
தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ணொளிசேர் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 6 |
1923.
|
வீங்கினார்
மும்மதிலும்
வில்வரையால் வெந்தவிய
வாங்கினார் வானவர்கள்
வந்திறைஞ்சுந் தொல்கோயில்
பாங்கினார் நான்மறையோ
டாறங்கம் பலகலைகள்
தாங்கினார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 7
|
பெண்-உமாதேவியார்.
ஆம்பல் அம்பூம் பொய்கை-ஆம்பல் மலரும்
அழகிய பூங்குளம். பூ-பொலிவு. ஆம்பற்பூவுமாம். பொய் கையைப்
புடையில் (எதிர்ப்பக்கத்தில்) தாக்கினார் (-வெட்டினார்) வாழும்
ஆக்கூர் என்க. ஆதரித்து ஆக்கினான் என முன்னும் பின்னும் கூட்டுக.
6. பொ-ரை:
பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு
வேதங்களையும் அருளியவனும், பாடலிலும் ஆடலிலும் வல்லவனும்,
ஒளிசெறிந்த கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான்
காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய
மதியொளி சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப்
பெறும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
கு-ரை:
ஒளி-அறிவினொளி. கண்ணொளி-நெருப்புக் கண்ணொளி.
தண் ஒளி-குளிர்ச்சி ஆக்கும் ஒளி.
7. பொ-ரை:
பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து
அழியுமாறு மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து
வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான
|