பக்கம் எண் :

556

1924.







கன்னெடிய குன்றெடுத்தான்
     தோளடரக் காலூன்றி
இன்னருளா லாட்கொண்ட
     வெம்பெருமான் தொல்கோயில்
பொன்னடிக்கே நாடோறும்
     பூவோடு நீர்சுமக்கும்
தன்னடியார் ஆக்கூரிற்
     றான்றோன்றி மாடமே.           8
1925.



நன்மையா னாரணனும்
     நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே
     டில்லாதான் தொல்கோயில்


கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும் ஆறு
அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும்
ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடமாகும்.

     கு-ரை: வீங்கினார்-பெருமையுடைய சிவபிரான், திரிபுரத்தசுரரையுங்
குறிக்கும். செலவில் மிக்கார்-மீச்செலவினார். (பகைவர்) வில்வரை-மேருவில்,
வில்லாகிய வரை. மறை+அங்கம்+பல கலைகள். தாங்கினார்-கற்றுணர்ந்து
கொண்டவர். அந்தணர். (பா.4. பார்க்க).

     8. பொ-ரை: கற்கள் நிரம்பிய நீண்ட கயிலை மலையைப்
பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை
ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணை
காட்டி ஆட்கொண்ட எம்பெருமானின் பழமையான கோயில்,
சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும்
சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்
தோன்றிமடம் ஆகும்.

     கு-ரை: கல்நெடிய குன்று-திருக்கயிலை மலை, பொன். . . .
அடியார்- ‘பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும் நின்அடியார்’
(தி.1 பதி.52 பா.3)

     9. பொ-ரை: நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும்
காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு