|
இன்மையாற்
சென்றிரந்தார்க்
கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 9 |
1926.
|
நாமருவு
புன்மை
நவிற்றச் சமண்டேரர்
பூமருவு கொன்றையினான்
புக்கமருந் தொல்கோயில்
சேன்மருவு பைங்கயத்துச்
செங்கழுநீர் பைங்குவளை
தாமருவு மாக்கூரிற்
றான்றோன்றி மாடமே. 10
|
இல்லாதவனும் ஆகிய
சிவபிரானது பழமையான கோயில், இன்மையால்
வந்து இரந்தவர்கட்கு இல்லை யென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார்
வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
கு-ரை:
தொன்மையான்-தொல்லோன் தோற்றம் கேடு-பிறப்பும்
இறப்பும். இன்மை-வறுமை. ஈத்துவக்கும் தன்மையார்-ஈந்துவக்கும் இன்பம்
அறிந்தவராய், தம் உடைமை வைத்திழவாத தண்ணளியர்,(சிறப்புலி நாயனார்
புராணம்.1.)
10. பொ-ரை:
சமணபௌத்தர்கள் நாவிற் பொருந்திய புன்மை
மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய
சடைனினாகிய சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள்
பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள்
ஆகியன வளரும் வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான்
தோன்றிமாடம் ஆகும்.
கு-ரை: புன்மை-அற்பக் கொள்கைகள்
புன்பேச்சு (ப.182 பா.10)ம்
ஆம். நவிற்ற-பிதற்ற. சமண்தேரர்-சமணரும் தேரரும். சேல்-மீன்.
பைங்கயம்-பசிய நீர்நிலை. தாம்-கழுநீர் குவளைகளைக் குறித்த
பன்மைப்பெயர்.
|