பக்கம் எண் :

558

1927.







ஆட லமர்ந்தானை
     யாக்கூரிற் றான்றோன்றி
மாட மமர்ந்தானை
     மாடஞ்சேர் தண்காழி
நாடற் கரியசீர்
     ஞானசம் பந்தன்சொல்
பாட லிவைவல்லார்க்
     கில்லையாம் பாவமே.               11

                   திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: திருக்கூத்து ஆடுவதை விரும்புபவனாய்,
ஆக்கூரில் தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாட
வீடுகள் நிரம்பிய சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய
ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம்
இல்லை.

     கு-ரை: ஆடலமர்ந்தான்-திருக்கூத்தை விரும்பியாடியவனை.
அமர்ந்தான்-விரும்பியவன். தங்கியவன். நாடற்கு-ஆராய்தற்கு.

திருஞானசம்பந்தர் புராணம்

தக்க அந்தணர் மேவும்அப் பதியினில்
     தான்தோன்றி மாடத்துச்
செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்திசைச்
     செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய்
     மீயச்சூர் பணிந்தேத்திப்
பக்கம் பாரிடம் பரவநின்றாடுவார்
     பாம்புர நகர்சேர்ந்தார்.

                             -சேக்கிழார்.