1929.
|
தையலா ளொருபாகஞ்
சடைமேலா ளவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோ
ரந்தணனா ருறையுமிடம்
மெய்சொல்லா விராவணனை
மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான்
புள்ளிருக்கு வேளூரே. 2
|
1930.
|
வாசநலஞ்
செய்திமையோர்
நாடோறு மலர்தூவ
ஈசனெம் பெருமானார்
இனிதாக வுறையுமிடம் |
மேல்
2.4.6.8.9.10. சடாயுவையும் 3,5,7, சம்பாதியையும் ஒருமையாகக்
குறித்தனர் எனலாம். புள்ளிருக்கு வேளூர் என்றதன் பெயர்க் காரணத்துள்
ஒரு பகுதி கூறப்பட்டது. சேக்கிழார்பெருமான் புள்ளிருக்கும் திருவேளூர்
எனப்பாடுதலால்.
2.
பொ-ரை:
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும்
சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று
உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப்
பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனுக்கு
நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும்
ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
கு-ரை:
தையலாள்-தலத்தின் அம்பிகை திருநாமம். சடைமேலாள்-
கங்காதேவி, மேல் ஓடி-வானிற்பறந்து, ஈடு-(இராவணனது) வலியை.
இராவணன் மெய்சொல்லாதவன்; சடாயு பொய் சொல்லாதவன் என்று
குறித்த திறம் உணர்க.
3.
பொ-ரை:
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த
நீராடி நறு மலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும்,
யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல்
சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும்
இடம் புள்ளிருக்குவேளூர்.
|