பக்கம் எண் :

561

  யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங்
     கொருநாளு மொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான்
     புள்ளிருக்கு வேளூரே.               3
1931.







மாகாயம் பெரியதொரு
     மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த
     வெரியாடி யுறையுமிடம்
ஆகாயந் தேரோடு
     மிராவணனை யமரின்கண்
போகாமே பொருதழித்தான்
     புள்ளிருக்கு வேளூரே.                4


     கு-ரை: வாசம்-தலவாசம். நலம்-தீர்த்தஸ்நானம், மூர்த்தி தரிசனம்
முதலியன. இமையோர்-தேவர், சூரியன், செவ்வாய். முதலோர்.

      மலர் தூவ-அர்ச்சித்துவழிபட, யோசனை-நான்கு கூப்பீடு.
கொணர்ந்து-கொண்டு வந்து. ஒழியாமே-தவறாமல். பூசனை-சிவார்ச்சனை.
இருந்தான்- சம்பாதி. இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் பூங்காவைத்து
நாள்தோறும் அங்கிருந்து மலர் கொண்டுவந்து வழிப்பட்ட வரலாற்றைக்
குறித்தது.

    4.  பொ-ரை: பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை
உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து
மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில்
தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப்
போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய
சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

     கு-ரை: காயம்-திருமேனி, ஏகாயம்-(ஏகாசம்) உத்தரீயம். ஆகாயத்தில்
ஓடுந்தேர்; புட்பகவிமானம். அமர்-போர். பொருது-தாக்கி. அழித்தான்-சடாயு.