1941.
|
பாம்பரைச்
சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்ப லிளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம்பூம் பொய்கை யாமாத்தூ ரம்மான்றன்
சாம்ப லகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 3 |
முக்கண்ணனும் ஆகிய
சிவபிரானின் புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம் தலைவன் என்று
ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.
கு-ரை:
கைம்மா-துதிக்கையையுடைய யானை. மும்மாமதில்-மூன்று
பெரிய புரம். பேர்-திருநாமம். அம்மான், பெம்மான் என்பவை, அருமகன்
பெருமகன் என்பவற்றின் மரூஉ. கோமகன் என்பது கோமான் என்று
மருவியதுபோல. (பா.81) ஏத்தாதார்-(உயர்த்துப்) புகழாதார். பேயரிற்
பேயர்-கடவுளைப் புகழ்ந்து போற்றி வழிபடாதவர் மக்கள் வடிவினராயினும்
பேயரே என்பது பெரியோர் முடிவு. நாயேன் பலநாளும் நினைப்பின்றி
மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் என்பது நம்பியாரூரர்
திருவாக்கு. வையத் தலகை என்றார் நாத்திகரை வள்ளுவர்.
3.
பொ-ரை: பாம்பை இடையில் கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம்
என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து மெலிந்ததோர் இளமதியைச்
சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய
ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய
அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு
இல்லை.
கு-ரை:
அரை-இடுப்பில். பாண்டரங்கன்-பாண்டரங்கம் என்னும்
திருக்கூத்தை ஆடியவன். விண்டது-பிளந்தது. தேம்பல்-மெலிதல், வாடுதல்.
மதிப்பிளவு தேய்பிறை என்னும் வழக்குணர்க. சென்னியான்-தலையன்.
சாம்பல்-திருநீறு. அகலத்தார்-மார்பினர் (அடியார்) திருஞான சம்பந்தர்க்குச்
சிவனடியாரிணக்கத்திலுள்ள பேரன்பும் உறுதியும் விளங்கும்.
நக்கனாரவர்
சார்வலானல்கு சார் விலோம் நாங்களே சைவனாரவர்
சார்வலால் யாதுஞ் சார்விலோம் நாங்களே (தி.2ப.77பா.8) சாதுக்கண்
மிக்கீர் இறையே வந்து சார்மின்களே (தி.3ப.54பா.5) கங்கை தரித்தானைச்
சாராதார் சார் வென்னே (தி.7 பா.872) சிவபெருமான் திருவடியே
சேரப்பெற்றோம் (தி.6 ப.98 பா.5.)
|