பக்கம் எண் :

573

     கு-ரை: ஆடல் அரவம்-படம் விரித்து ஆடுதலையுடைய பாம்பு.
அசைத்த-கச்சாகக்கட்டிய. கோடல்-வெண்காந்தள். இரும்புறவு-பெரியகாடு.
முல்லை நிலம். புறவு, கொச்சை வயம் காழியின் வேறு பெயர்கள். பாவம்
இல்லை ஆகும் என்க.

      திருஞானசம்பந்தர் புராணம்

பரவி ஏத்திய திருப்பதி கத்திசை
     பாடினார் பணிந்தங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்தினி துறைபவர்
     விமலரை வணங்கிப் போய்
அரவு நீர்ச்சடை அங்கணர் தாம்மகிழ்ந்
     துறைதிரு வாமாத்தூர்
சிரபு ரத்துவந் தருளிய திருமறைச்
     சிறுவர்சென் றணைவுற்றார்.
சென்ற ணைந்துசிந் தையின்மகிழ் விருப்பொடு
     திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும் வன்னியும்
     புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை எனுந்திருப்பதிகமெய்
     குலவிய இசைபாடி
நன்றும் இன்புறப் பணிந்துசெல் வார்திருக்
     கோவலூர் நகர்சேர்ந்தார்.

                              -சேக்கிழார்.