பதிக
வரலாறு:
சண்பைநகர்
வேந்தர் சொல்வேந்தரொடு திருவாஞ்சியத்தில்
திருநீலகண்டப் பெருமானை வணங்கினார். தலையாலங்காடு முதலிய
தலங்களையும் பணிந்தார். திருவாரூர் சென்றார். திருக்காறாயில், தேவூர்,
திருநெல்லிக்கா என்னும் தலங்களை வழிபட்டுத் திருக்கைச்சினத்தைப்
பரவிப் பாடியதிருப்பதிகம் இது.
பண்:
சீகாமரம்
ப.தொ.எண்:
181 |
|
பதிக
எண்: 45 |
திருச்சிற்றம்பலம்
1950.
|
தையலோர்
கூறுடையான்
தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான்
மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல்
ஏந்தி நிவந்தொளிசேர்
கையுடையான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 1 |
1.
பொ-ரை: மாதொருபாகனும்,
குளிர்ந்த பிறைமதி சூடிய
செஞ்சடையினனும் கருமை விரவிய நீலமணி மிடற்றானும்,
வேதப்பாடல்களைப் பாடுவோனும், நெய் பூசப் பெற்ற மூவிலை
வடிவமான சூலத்தை ஏந்திப் பெருகி ஒளிர்கின்ற கையை உடையோனும்
ஆகிய சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினமாகும்.
கு-ரை:
தையல்-உமாதேவியார்.
கூறு-இடப்பாகம். மை-மேகம்.
உலாம்-ஒத்த. நிவந்து-மேலோங்கி. ஒளி-தீ. கைச்சினம்-இந்திரனது
கைச்சின்னம் (குறி). சிவபிரான் திருமேனியில் பட்டது பற்றிய
காரணப்பெயர். 1.2.3.6. ஆம் பாடல்களில் உணர்த்திய மறைப் பாடல்
இத்தலத்தின் விசேடமாதலறியலாம்.
|