பக்கம் எண் :

575

1951.







விடமல்கு கண்டத்தான்
     வெள்வளையோர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான்
     பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கு மாடலினான்
     நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான்
     உறைகோயில் கைச்சினமே.         2

1952.







பாடலார் நான்மறையான்
     பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியந்
     துன்று கரந்தையொடும்
ஆடலா னங்கை
     யனலேந்தி யாடரவக்
காடலான் மேவியுறை
     கோயில் கைச்சினமே.             3


     2. பொ-ரை: விடம் பொருந்திய கண்டத்தினனும், வெண்மையான
வளையல்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவனும், படம்
எடுத்தாடும் பாம்பினை அரையில் கட்டியவனும், பகைவரின் முப்புரங்களை
எரித்தவனும், நடனம் ஆடுபவனும், நான்மறைகளைப் பாடுபவனும்,
மதயானையை உரித்த தோலினனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில்
கைச்சினம்.

     கு-ரை: விடம்-நஞ்சு. மல்கு-நிறைந்த. கண்டத்தான்-கழுத்தினன்.
பற்றாதார்-பகைவர். (தாரகாட்சன் முதலிய மூவர்). நடம்-தாண்டவத்தின்
வகை. ஆடல்-ஆடுதல். ‘நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்’
(திருவாசகம்). கடம்-மதநீர்; காடுமாம். உரியான்-தோலுடையான்.

     3. பொ-ரை: பாடல்களோடு கூடிய நான்மறைகளை அருளியவனும்,
பசிய கொன்றையைப் பாம்போடு சூடியவனும், வெண்மையான பிறைமதி,
செறிந்த கரந்தைத்தளிர் ஆகியன சூடி ஆடுபவனும், அழகிய கையில்
அனல் ஏந்தி, ஆடும் அரவுடன் இடுகாட்டில் உறைபவனும் ஆகிய
சிவபிரான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.