1953.
|
பண்டமரர்
கூடிக்
கடைந்த படுகடல்நஞ்
சுண்டபிரா னென்றிறைஞ்சி
யும்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொன்னகர
மூன்றுடனே வெந்தவியக்
கண்டபிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 4 |
1954.
|
தேய்ந்துமலி
வெண்பிறையான்
செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான்
மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத்
தடங்கடனஞ்சுண்டநங்கைக்
காய்ந்தபிரான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 5 |
கு-ரை:
சூடல்-சூடுதல். துன்று-நெருங்கிய. கரந்தை-பூ. காடலான்-
காட்டினன். அரவக்காடலான்-சடைக்காடு தாமரைக்காடு, வெள்ளக்காடு,
போல மிகுதியை உணர்த்தியது.
4.
பொ-ரை: முற்காலத்தே தேவர்கள் கூடித்திருப்பாற் கடலைக்
கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்ட தலைவன் என்ற நன்றி
உணர்வோடு தேவர்கள் தொழுது ஏத்தப், பகைவருடைய பழமையான
முப்புரங்களையும் வெந்தழியுமாறு செய்தவனாகிய சிவபிரான் மேவி
உறையும் கோவில் கைச்சினம்.
கு-ரை:
பண்டு-முன்பு. அமரர்-தேவர். படுகடல்-ஆழ்கடல்.
விண்டவர்கள் தொல்நகரம்-பகைவர்களின் பழைய திரிபுரம்.
5.
பொ-ரை: தேய்ந்து வளரும் வெண்பிறையை அணிந்தவனும்,
சிவந்த திருமேனியினனும், பொருந்த விளங்கும் வெண்ணீற்றினனும்,
மாதொருகூறனும், வருந்தி அமரர் வேண்டப் பெரியகடலிடைத் தோன்றிய
நஞ்சினை உண்டவனும், மன்மதனை எரித்தவனும் ஆகிய சிவபெருமான்
மேவி உறையும் கோயில் கைச்சினம்.
|