1955.
|
மங்கையோர்
கூறுடையான்
மன்னு மறைபயின்றான்
அங்கையோர் வெண்டலையா
னாடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த
சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 6 |
1956.
|
வரியரவே
நாணாக
மால்வரையே வில்லாக
எரிகணையான் முப்புரங்க
ளெய்துகந்த வெம்பெருமான் |
கு-ரை:
தேய்ந்து மலி-குறைந்து வளரும். திங்களுக்கு இயல்பு
அடைமொழி. இது சிவபெருமான் திருமுடிமேற் பிறைக்கு அன்று.
இலங்கு-விளங்கும். மாது-உமாதேவியார். சாய்ந்து-மெலிந்து, ஓடி
யெனலுமாம். அநங்கை-அநங்கனை, உருவிலியாகிய மன்மதனை,
பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்தும் பெருமைபோலும்
(ப.349 பா.9) மாய்ந்தன தீவினை. . . . அநங்கைக் காய்ந்தபிரான்
கண்டியூர் எம்பிரான் (தி.4 பா.93 ப.9). அநங்கனை என்பது அநங்கை
எனக் குறைந்தது போலும்.
6.
பொ-ரை:மாதொரு
கூறனும், நிலையான வேதங்களை
ஓதுபவனும், அழகிய கையில் வெள்ளியதொரு தலையோட்டை
ஏந்தியவனும், ஆடும் பாம்பினைப் பூண்டு மகிழ்ந்தவனும், முடியில்
திங்கள், பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான்
மேவி உறையும் கோயில் கைச்சினம்.
கு-ரை:அங்கையோர்
வெண்டலையான்-பிரமகபாலத்தை ஏந்திய
கையன். பூண்ட அரவம்-அணிந்த பாம்பு. முறையே திருமேனியிலும்
திருமுடியிலும் இருத்தல்பற்றி ஆதலின் கூறியது கூறலன்று-. (ப.155 பா.7
பார்க்க).
7.
பொ-ரை:வரிகளை
உடைய பாம்பினை நாணாகவும், பெரிய
மலையை வில்லாகவும் கொண்டு எரிபொருந்திய கணையால் முப்புரங்களை
எய்து அழித்து மகிழ்ந்த எமது பெருமானும், நெற்
|