|
பொரிசுடலை
யீமப்
புறங்காட்டான் போர்த்ததோர்
கரியுரியான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 7 |
1957.
|
போதுலவு
கொன்றை
புனைந்தான் றிருமுடிமேல்
மாதுமையா ளஞ்ச
மலையெடுத்த வாளரக்கன்
நீதியினா லேத்த
நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை
கோயில் கைச்சினமே. 8 |
பொறியைத் தூவும்
சுடலையாகிய ஈமப்புறங்காட்டில் ஆடுபவனும், கரியுரி
போர்த்தவனும் ஆகிய சிவபெருமான் மேவி உறையும் கோயில் கைச்சினம்.
கு-ரை:
வரி அரவு-வாசுகியென்னும் பாம்பு. நாண்-வில்லின் நாண்
(கயிறு). மால்வரை-பெரிய மேருமலை. எரி கணை-அக்கினியை
நுனியிலுடைய பாணம். சுடலை-சுடுதலைக் கொண்ட. ஈமப் புறங்காடு-
புறத்தேயுள்ள ஈமக்காடு. கரி உரி-யானைத்தோல். போது-மலரும் பருவத்தது.
நீதியினால் ஏத்த-முறைப்படித் துதிக்க.
8.
பொ-ரை: உமைமாது அஞ்சக் கயிலை மலையைப் பெயர்த்த
வாளரக்கனாகிய இராவணன் முறையோடு துதி அவனை முன்போல
விளங்கச் செய்து திருமுடிமேல் கொன்றைமலர் மாலையைப் புனைந்தவனும்,
இடுகாட்டில் நின்று ஆடுவதில் விருப்பமுடையவனும் ஆகிய சிவபெருமான்
மேவி உறை கோயில் கைச்சினம்.
கு-ரை:
திருமுடிமேல் கொன்றை மாலையை அணிந்தான்.
முடிபோதுகள் பொருந்திய கொன்றை, உலவு கொன்றை-வினைத்தொகை.
உமையாள் அஞ்ச மலையை எடுத்தான் அரக்கன். நிகழ்வித்து-(பண்டுபோல்)
விளங்கச்செய்து. புனைந்தானும் காதலினானும் ஆகிய சிவபெருமான்
கைச்சினம் என்றியைக்க.
|