பக்கம் எண் :

579

1958.







மண்ணினைமுன் சென்றிரந்த
     மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ண
     மெரியுருவ மாயபிரான்
பண்ணிசையா லேத்தப்
     படுவான்றன் னெற்றியின்மேல்
கண்ணுடையான் மேவியுறை
     கோயில் கைச்சினமே.              9
         * * * * * * * *                10
1959.







தண்வயல்சூழ் காழித்
     தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை
     கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையா லேத்திப்
     பயின்ற விவைவல்லார்
விண்ணவரா யோங்கி
     வியனுலகம் ஆள்வாரே.             11

                      திருச்சிற்றம்பலம்


     9. பொ-ரை: மாவலியிடம் மூன்றடி மண் இரந்த திருமாலும்,
தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் எண்ணவும் இயலாதவாறு
எரியுருவாய் நீண்ட பிரானும், அடியவர்களால் பண்ணிசையோடு
ஏத்தப்படுபவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய சிவபிரான் மேவி உறையும்
கோயில் கைச்சினம். கு-ரை: இரந்த-மாவலியினிடத்து யாசித்த. எண்-
எண்ணம். பண்ணிசையால் ஏத்தப்படுவான், ‘ஏழிசையாய் இசைப் பயனாய்’
விளங்குதல் பற்றியது.

     10.     * * * * * * * *

     11. பொ-ரை:குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட காழிப்பதியில்
தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நுதல் விழிநாட்டத்து இறையோன