பக்கம் எண் :

580

மேவி உறையும் கோயிலைக் கொண்டுள்ள கைச்சினத்தைப் பண்ணிசையோடு
ஏத்திப்பாடிய இப்பதிகத்தை ஓத வல்லவர் விண்ணவராய் உயர்ந்து அகன்ற
அவ்வுலகை ஆட்சிபுரிவர்.

     கு-ரை: பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவை என்றதால்;
ஆசிரியருடைய இசை உணர்வின் மிகுதியையும் இப்பதிகத்தைப் பல
முறைபாடி மகிழ்ந்ததையும் உணரலாகும். வியனுலகம்-சொர்க்கம். வீடுமாம்,
வியல் (வியன்) - அகலம்.

திருஞானசம்பந்தர் புராணம்

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
     நலங்கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
     பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
     ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
      திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

                                         -சேக்கிழார்.