3. கானயங்கிய
தண்கழி (பதி.140. பா.3.) என்ற விடத்து அயங்குதல்
அசங்குதல் என்றதன் மரூஉவாகக் கொண்டுரைத்தலுமாம் என்றும்,
4. விண்ணினிற்
பிறை செஞ்சடைவைத்த வியப்பதே (பதி.140. பா.5.)
என்றவிடத்துப் பிறை-பிறத்தலுடையது என்றும்.
5. இப்பிறை
என்றதன் காரணத்தையே விண்ணினாலான பிறை
(பதி.143 பா.7.) என்றவிடத்து நினைவூட்டியும்,
6. தெங்குதுங்கப்
பொழிற்செல்வம் மல்கும் திருச்சிக்கலுள்
(பதி.144. பா.5) என்றவிடத்து, தெங்கு-தென்கு-தென்னை என்பதால் அதன்
தொல்லுரு விளங்கும் என்றும்,
7. இப்பதிகத்தேயே
பா. 10-இல் கட்டமண் கழுக்கள் சொல்லினைக்
கருதாது என்றவிடத்து, அமண்-சமண்; க்ஷமண் என்பதன் திரிபு என்றும்,
8. மழபாடி
மழுவாடி என்பதன் மரூஉ என்றும் (பதி.145. பா.1 உரை)
9. பெம்மானைப்
பேயுடன் ஆடல் புரிந்தானை (பதி.14.பா.2)
என்றவிடத்து, மருமகன்-மருமான் என்றானது போலப் பெருமகன்
பெருமான் என மருவிற்று என்றும்,
10. இனிதனை
ஏத்துவர் ஏதமிலாதாரே (பதி.150. பா.3.) என்றவிடத்து,
இனிது+அன்+ஐ இன்புருவானவனை என்றும்.
11. தாரானே
தாமரைமேல் அயன்றான் தொழும் (பதி.151.பா.1.)
என்றவிடத்து அயன்-அஜன்; தோன்றாதவன் என்பது அடிச்சொற்பொருள்
என்றும்,
12. அழுமாறு
வல்லார் அழுந்தை மறையோர் (பதி.156. பா.1)
என்றவிடத்து, அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ. இது புலவர்
செய்துகொள்ளும் மரூஉச் சொற்களுள் ஒன்று. புலியூர்-புலிசை,
மறைக்காடு-மறைசை, தொட்டிக்கலை-கலைசை, மறையூர் (திருவோத்தூர்)
மறைசை என்பவை வழங்கி மருவாதன ஆயினும் புலவர் வழக்கில் உள
என்றும்,
|