பக்கம் எண் :

59

     13. ‘ஓடும் நதியும் மதியோடு உரகம்’ (பதி.158. பா.2.) என்ற விடத்து,
‘உரகம்-பாம்பு, மார்பால் ஊர்வது’ என்றும், (உரம் - மார்புகம் -ஊர்வது)

     14. ‘நல்குரவும் இன்பமும் நலங்களவையாகி’ (பதி.165. பா.7.)
என்றவிடத்து, ‘நல்கூர்தல்-நல்க+ஊர்தல் என்னும் தொடர் நல் கூர்தல் என
மருவிற்று’ என்றும், புரவலர் நல்கு மிடந்தோறும் அதனைப் பெறுதற்காக
இரவலர் ஊர்ந்து செல்லுதலின் நல்க ஊர்தல் என்றனர் உரையாசிரியர்.)

     15. மேற்பதிகத்தேயே பா.3-இல் ‘நாவணவும் அந்தணன்’ என்றவிடத்து,
‘அம்+தண்+அன்-அழகும் குளிர்ச்சியும் உடையவன். அந்தத்தை அணவுதலை
உடையவன் என்றாருமுளர்’ என்றும்,

     16. ‘சொற்றமறியாதவர்கள் சொன்ன சொலைவிட்டு’ (பதி.167. பா.10.)
என்றவிடத்துச், ‘சொற்றம்-சொல்லும் சொற்கள் சொல்+து+அம்’ என்றும்,

     17. ‘ஏடுமலி கொன்றை அரவிந்து விளவன்னி’ (பதி.169. பா.1)
என்றவிடத்து, ஏடு-இதழ் இளை+து, எளை+து, ஏள்+து, ஏடு என்றும்,
(சிந்தாமணி 1552) - உரையை ஒட்டி இவ்வாறு ஏடு என்ற சொல்லின்
நுண்பொருள் கொண்டு அதனைப் பிரித்துக் காட்டிப் புணர்த்தியிருப்பதும்

     பெரிதும் போற்றற் குரியதன்றோ?

     18. ‘வேளாளர்’ என்றவர்கள் வள்ளன்மையின் மிக்கிருக்கும் தாளாளர்
ஆக்கூரிற்றான்றோன்றி மாடமே’ (பதி.178. பா.3.) என்றவிடத்துத் தாளாளர்,
வேளாளர் என்ற சொற்களை ஆராய்ச்சி உணர்வோடு பிரித்துப் பொருள்
கூறி ‘வேள்மண் என்றுகொண்டு உழவர் எனலுமாம்’ என்றும்,

     19. ‘அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே’
(பதி.182. பா.8.) என்றவிடத்து, ‘அத்தன்-அத்தை, ஆத்தான்-ஆத்தாள்
என்பவை தந்தை தாயரைக் குறித்த பழையவழக்கு, அத்தை என்பது
தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது’ என்றும்,

     20. ‘பஞ்சின் மெல்லடி மாதராடவர்’ (பதி.188. பா.6.) என்றவிடத்து,
பஞ்சு-பன்+து என்றதன் மரூஉ. பனுவல் என்பதற்கும்