பக்கம் எண் :

60

அதுவே பகுதி, பஞ்சினைப் பன்னுதல் இன்றும் உண்டு என்றும், ‘மஞ்சன்’ மைந்தன் என்பதன் மரூஉ என்றும்,

     21. ‘பரிதி இயங்கும் பாரிற் சீரார் பணியாலே’ (பதி.195. பா.5.) என்ற
இடத்துப் ‘பரிதி-இதைப் பருதி என்றெழுதுவது குரிசில் என்பதைக் குருசில்
என்றெழுதுவது போலும் பிழை’ என்றும்,

     22. ‘பேரும் பொழுதும் பெயரும் பொழுதும்’ (பதி. 196. பா.2.) என்ற
இடத்துப் ‘பெயர்தல்-மீண்டும் வருதல் பேர்தல் முதன்முதலாக இடம்விட்டு
அசைதல்’ என்றும்,

     23. ‘துன்னுங் கடல் நஞ்சிருள் தோய்கண்டர் தொன்மூதூர்’
(பதி.199. பா.1.) என்றவிடத்து, நெடுங்காலமாக உள்ள வெற்றிடத்தையும்
அங்குத் தோன்றி நெடுங்காலமாக இருக்கும் ஒன்றனையும் காட்டித்
தொன்மைக்கும் முதுமைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தியும்,

     24. ‘இப்பதிகத்தேயே பத்தாம் திருப்பாடலில், கையார் சோறு
கவர்குண்டர்களும்’ என்றவிடத்து, சோறு-சொல்+து சொல்-நெல்.............சோறு
என்பதன் பொருள் சொல்லால் ஆனது என்றும்,

     25. ‘பதிகம் 208. பா.1 இன் உரையில், ‘அருமகன் என்பதன் மரூஉ
அம்மான், அம்மஹாந் என்பதன் திரிபெனல் பிழை’ என்றும்,

     26. ‘பதிகம் 220. பா.6 இல் ‘பொன்னி என்றது நீரின் செம்மையும்
மணலின் பொன்மையும் பற்றி வழங்கிய காரணப்பெயர்’ என்றும்,

     27. ‘போரிடையன்று மூன்று மதிலெய்த ஞான்று’ (பதி.222. பா.3.)
என்றவிடத்து, ’ஞான்று-நாளன்று என்பதன் மரூஉ; இது கல்வெட்டுக்களில்
பயின்றுள்ளது’ என்றும்,

     28. ‘பதிகம் 226. பா.1 இல், அரத்துறை-அறத்துறை என்பதன் மரூஉ
அரன் துறை என்பது சிறவாது என்றும்,

     29. ‘கேழல்பூழ்தி கிளைக்கமணி சிந்தும் கேதாரமே’ (பதி.250. பா.5)
என்ற இடத்துப் புழுதியின் மரூஉ பூழ்தி; பொழுது-போழ்து என்புழிப்போல
என்றும்,

     30. ‘குரோதி என்பதன் திரிபு கோதி என்றும் (பதி.162. பா.7)