எழுதியுள்ளார்கள்.
இவ்விடங்கள் ஆசிரியரின் சொல்லாராய்ச்சிப் புலமையையும், தமிழ் இலக்கியப் பயிற்சியையும்
நன்கு விளக்கும்.
2. சித்தாந்த
சாத்திரப்பயிற்சி:
ஆசிரியரின்
சித்தாந்த சாத்திரப்பயிற்சியும் திறமும், இன்றியமையாத
இடங்களில் இவர் எழுதும் எடுத்துக் காட்டுக்களால் புலனாகின்றன.
அவற்றைக் கீழே காணலாம்.
1. பதிகம்
137 பா.3-இன் உரையில், யானையை உரித்தது ஆணவமல
நாசம் என்பர். மங்கைபங்கு; போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப்
புரிதல் பற்றியும், உயிர்க்கு இச்சாஞானக்கிரியா பலத்தை மிக
விளைத்தல்பற்றியும் ஆயிற்று என்று எழுதுதலும்,
2. பதிகம்
143. பா.3-இன் உரையில் ஒன்று முதல் எட்டு ஈறாகிய
எண்ணுப்பெயர் அமைந்த அழகு உணரத்தக்கது என்றுரைத்து சிவஞான
சித்தியார் 245ஆம், விருத்தத்தையும் சிவஞானமாபாடிய 6-ஆம் சூத்திர
வசனமும், சிவஞான சித்தியார் 85, 66, 83 விருத்தப்பாக்களின் உரையையும்
கொண்டு விளக்கி எழுதுதலும்,
3 .ஞானமாக
நினைவார் வினையாயின நையுமே (பதி.144-1) என்புழி,
ஞானமாக நினைவார் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய
பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நீங்காதே நினைந்து நிற்பவர், என்று சித்தியார் 292-ஆம் விருத்தப்
பாவை வசனமாக எழுதுதலும்.
4. ஆளும்
ஆதிப்பிரான் அடிகள் (பதி.146. பா.7) என்புழி
அடிகள்-பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள். யான் எனது
என்னும் இருசெருக்கும் அறுதலுமாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம்,
பரை உயிரில் யான் என தென்றற நின்றதடியாம் என்று உண்மைநெறி
விளக்கத்தை அடியாகக்கொண்டு உரை எழுதுதலும்,
5. இன்னும்
(பதி.147. பா.1 இல்) துகளறு போதக் கருத்தையும்,
6. (பதி.152.
பா.9இல்) திருவருட்பயன் கருத்தையும்,
|