பக்கம் எண் :

62

     7. (பதி.155. பா.6இல்) சிவஞானசித்தியார் 296, 323, கருத்துக்களையும்,

     8. (பதி.157. பா.7இல்) சிவஞானபோதச் சிற்றுரைப் பகுதியையும் 304,
291, விருத்தக் கருத்தையும்,

     9. (பதி.224. பா.4-இல்) சிவதருசூமாத்தரக் கருத்துக்களையும்,

     10. (பதி.24. பா.3-இல்) திருவுந்தியார் 7-ஆம் செய்யுளின் கருத்தையும் உள்ளடக்கி எழுதுதலும்,

     ஆசிரியரின் பரந்துபட்ட சித்தாந்தப் பேரறிவையும், சித்தாந்த
ரத்நாகரம் என்ற சிறப்புப் பெயரின் வாய்மையையும் நன்கு விளக்கி
நிற்கின்றன.

3. இலக்கணநூற் புலமை:

     ஆசிரியரின் இலக்கணநூற் புலமை, உரையில் காட்டும் இலக்கண
நுண்கருத்துக்களாலும், நூற்பாக்களாலும் இனிது புலனாகும்,

     1. ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள’ (பதி. 137. பா. 4. உரை)

     2. ‘முந்நிலைக்காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும்
நிகழுங்காலத்து மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்’ (பதி. 147.
பா.6 உரை)

     3. ‘நம்பும்மேவும் நசையாகும்மே’ (பதி.147. பா.8 உரை) (பதி.163.3.
உரை)

     4. தொல் மரபியல்; சூ 37, 38 (பதி.160 பா.6 உரை)

     5. ‘கன்னமும் கோசமும் கையும் என்னும் இன்ன முத்தானத்து இழிவன
மும்மதம்’ இது பொருட்டொகை நிகண்டு. (பதி. 164, பா.உரை)

     6. ‘ஐம்பாலறியும் பண்பு தொகுமொழியும் புணரியல் நிலையிடை
உணரத்தோன்றா’ (பதி.258 பா.3)