7. இல்லென்கிளவி
இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடைவருதலும் தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே
(பா.195. பா.9.)
இவ்வாறு
இன்றியமையாத இடங்களில் தொல்காப்பியச்
சூத்திரங்களையும் அவற்றின் உரைப் பகுதிகளையும் நினைவுறுத்தி
உரையெழுதிச் செல்லுதல் அறிவாளர்க்குப் பெருவிந்தாம். ஆண்டாண்டுப்
பாடலில் வரும் சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு எழுதிச் செல்லுதலும்
இவரது இலக்கணப் புலமையை எடுத்துக் காட்டும்.
எடுத்துக்காட்டாக,
பதிக எண்கள் முறையே 137, 140, 142, 161, 173,
176, 204, என்னுமிவற்றிலும் பிறபதிகங்களிலும் ஆசிரியரது இலக்கணக்
குறிப்புகளைக் காணலாம்.
அணிநூல்:
அணி
இலக்கணத்தில் ஆசிரியர்க்குள்ள புலமையைத் தண்டியலங்கார
உரைப்பாடலாகிய,
சீலத்தால்
ஞானத்தால் தோற்றத்தால் சென்றகன்ற
காலத்தால் ஆராத காதலால்-ஞாலத்தார்
இச்சிக்கச் சாலச் சிறந்துஅடி யேற்கினிதாம்
கச்சிக்கச் சாலைக் கனி |
என்பதனை 177-ஆம்
பதிக 9-ஆம் பாடல் உரையில் எடுத்தாளுவதாலும்,
இன்னும் உரிய இடங்களில் பாடலில் உள்ள அணி விசேடங்களை விளக்கிச்
செல்வதனாலும் புலனாம்.
4. வடநூலறிவும்
வடசொல்லாட்சியும்:
ஆசிரியரின்
வடலூலறிவு ஆகமசாரமாகிய திருமுறைக் குறிப்புரையின்
இடையிடையே தெற்றெனப் புலனாகின்றது. 152-ஆம் பதிகத்து 6ஆம் பாடல்
உரையில்,
மொழியானை
முன்னொருநான் மறையா றங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை |
என்ற இடத்து, பிருகதாரணியோப
நிஷத்து 4, 4, 10, 6, 5, 11 ஆம்
|