சூத்திரக் கருத்துக்களை
விளக்குவதனாலும் 189ஆம் பதிகத்து 4ஆம்
பாடல் உரையில் உருவவழிபாட்டின் சிறப்பைச் சர்வசுரோத சங்கிரகத்துச்
சுலோகமொன்றால் விளக்குவதனாலும்,
பரந்தோங்கு
பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்டு
உரந்தோன்றும் பாடல்கேட்டு உவகையளித்தீர் |
என்ற இடத்து, உரந்தோன்று
பாடல் என்றது சாமவேதமே என்பதனை
விளக்க வான்மீக ராமாயணத்து வாக்கியங்களை (9பதி.190-8)
எடுத்தாளுவதனாலும், பதி. 250. பா.4ன் உரையில், உள்ள மிக்கார் குதிரை
முகத்தார் என்பதன் உரையில் குதிரை முகத்தார், கின்னரர்கள் என்பதனை
விளக்க அமரகோசம் என்ற வடநூலின் முதற்காண்டத்து 74-ஆம் சுலோகம்
காட்டி விளக்கிச் செல்வதனாலும், 248 ஆம் பதிகம் 5-ஆம் பாடல்
உரையில் கையணிம்மலரால் வணங்கிட வெய்யவல் வினை வீடுமே
என்புழிக் கைநிறையப் பூத்தூவி வழிபடுதலை வடமொழிச் சான்று காட்டித்
தெளிவுறுத்துவதனாலும், இன்னோரன்ன பிறவற்றாலும் ஆசிரியரின்
வடநூலறிவு ஒருவாறு புலனாம்.
இவர்தம் உரையில்
செந்தமிழ்ச் சொற்களே நிறைந்திருக்கும்,
இருப்பினும் ஆண்டாண்டு வடசொல்லாட்சியும் உண்டு. உடையாய்
என்பதனைச் சுவாமி என்றும், அரவணியன் என்பதனைச் சர்ப்பாபரணன்
என்றும், வினையைக் கர்மம் என்றும், முக்கண்ணினன் என்பதனைச் சோம
சூரியாக்கினி நேத்திரங்களை உடையவன் என்றும், மருந்து என்பதனை
பவரோக வைத்யநாதன் என்றும், அரவா என்பதனை ஹரவா என்றும்,
நயன் என்பதனை நீதி சொரூபன் என்றும், பொருப்பின் மங்கை என்பதற்கு
இமாசல குமாரி என்றும், அறவன் என்பதற்குத் தருமரூபி என்றும்,
வாய்மையர் என்பதற்குச் சத்தியரூபர் என்றும், தக்கன் என்பதற்குத் தக்ஷன்
என்றும், உரையில் பல இடங்களிலும் தமிழ்ச் சொற்களுக்குப் பொருள்
காணுமிடத்து வடசொல்லாட்சியையும் சிறுபான்மை கையாண்டுள்ளார். இது
இவர் வடமொழியின் பால் தமிழோடொத்த பெருமதிப்பு வைத்துள்ளவர்
என்பதனைத் தெளிவுற விளக்குவதாகும்.
6. சோதிடநூற்
புலமை:
சோதிடம்
நம்நாட்டின் தொன்றுதொட்ட கலை. வானத்து
விண்மீன்களைக் கொண்டு காலத்தை - வாழ்வைக் கணக்கிட்ட கலை இது.
|