பக்கம் எண் :

65

“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
 தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்”

என்கிறது புறநானூறு (117) மைம்மீன் என்பது சனியை. சனி புகைதலாவது
இடபம், சிங்கம், மீனம் இவற்றோடு மாறுபடுதல். இந்த மூன்றனுள் சனியின்
பகைவீடாகிய சிங்கராசியில் சனிபுகின் உலகிற்கே பெருந் தீங்குவிளையும்
என்பது சோதிட நூற் கொள்கை. இதனைத் தமிழ்முன்னோர்
தெரிந்திருந்தனர்.

“கரியவன் புகையினும் தூமம் தோன்றினும்
 விரிகதிர் வெள்ளி தென்புலம் பாடரினும்”

என்று இசைக்கிறது சிலம்பு (10-102-103) எனவே சோதிட நூல் அறிவு
தமிழர்க்கு மிக்கிருந்தது என்றறியலாம்.

     நம் உரையாசிரியரும் தமிழர்க்குரிய இப்பழங் கலையில் சிறந்த
புலமைமிக்குள்ளவர் என்பதனைக் குறிப்புரை கூறுகின்றது.

     221 - ஆம் பதிகமாகிய ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும்
பதிகத்துரை இதனை நன்கு காட்டும். திருமறைக்காட்டில் பாலறாவாயர்
இருந்த காலத்துப் பாண்டியன் மாதேவியார் வேண்டுகோளுக்கிசைந்து
ஆண்டெழுந்தருளுதற்குத் தூண்டிய மனத்தினராய்ப் புறப்படுங்கால்
நாவரசப் பெருந்தகையார், அமணர் கொடியர்; உறுகோள் தாமும் கொடிய
என உணர்த்தப், பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது
என்று கூறியருளிப் பின்னர்த் திருவாய் மலர்ந்தது இத்திருப்பதிகம். இதனுள்
2-ஆம் திருப்பாடலில்,

“ஒன்பதொடு ஒன்றொடுஏழு பதினெட்டொ டாறும்
 உடனாய நாள்கள் அவைதாம்
 அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
 அடியா ரவர்க்கு மிகவே”

எனவரும் வரிகட்குள்ள ஆசிரியர் உரை சீரியதாகும்.

     ‘ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை, பரணி,
கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, என்ற ஆகாத
விண்மீன்களும், இன்னும் ஆகாத திதிகளும் கிழமைகளும் அடியார்க்கு
நல்லனவே’ என்று ஆசிரியர் எழுதுதலும்,