ஆதிரை,
பரணி, ஆரல் ஆயில்யமுப்பூரம் கேட்டை என்ற
சோதிடநூற் பாட்டை உதாரணமாகக் காட்டி விளக்குதலும், இப்பதிகத்து
இறுதித் திருப்பாடலில் கோள், நாள் என்பவற்றின் பொருளைத்
தெளிவுபடுத்தியிருத்தலும்,
ஆசிரியரது
இத்துறைப் புலமையை நன்கு விளக்கும்.
6. புதியன
பொருள்கள்:
1.நாடி
ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டிசை பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது
ஞானமே |
(பதி.138-11) என்பதன்
உரையில், சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்குக
என்ற தொடரில் தமிழ் என்பது திருமுறைகளையே குறிக்கும் என்று
தெளிந்து எழுதுதலும்.
2. செந்து
என்பது ஒரு பெரும்பண் என்று எழுதுதலும் (பதி.139-10)
3. இசை-வேதாகம
முழக்கம்; புகழ் எனல் பொருந்தாது பதி. (140-10)
என்று வரைதலும்
4. கலிகடந்த
கையான் என்றது திருஞானசம்பந்தர் எரி ஓம்பும்
திருக்கையால் அளவற்றோரது வறுமை நீக்கிய உண்மையை உணர்த்தி
நின்றது என்று எழுதுதலும் (பதி.142-12)
5. காலகாலர்
என்பதற்கு இயமனுக்கும் கால முடிவைச் செய்பவர்
என்று எழுதுதலும் (பதி.143-2)
6. மேற்கண்ட
பாடலிலேயே ஞாலம் என்பது தொங்குவது என்ற
காரணப் பொருளதாய் முன்னோரது பூகோள ககோள ஞானத்தை
உணர்த்துவது அறிக என எழுதுதலும்,
7. பிறை-பிறத்தலுடையது
எனப்பொருள் காண்டலும் (பதி.143-7)
8. ஆனைந்துள்
பால், தயிர், நெய், என்ற மூன்றே சைவாசாரியர்
கொண்டாடியன என நுண்பொருள் காணுதலும் (பதி.146.5.)
|