9. ஏத்தல்-இறைவன்புகழை
எடுத்தோதுதல். எடுத்தலோசையே
தோத்திரங்களுக்கு உரியது என்று எழுதுதலும் (பதி.146-7)
10. மாந்தர்
மனிதரிற் சிறந்தார் எனப் பொருள் கோடலும் (பதி.147-6)
11. கந்தண்பூங்
காழியூரான் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல
(பதி.148-11.) என்ற இடத்துக் கலிக்கோவை என்பதற்கு ஒலிமாலை எனவும்,
ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் அருளிய கோவையாகலின் கலியைத்
தீர்க்கும் கோவை எனலுமாம் எனவும், கலியுகத்துக்கோவை
கலிவிருத்தக்கோவை எனல் பொருந்துமேற் கொள்க எனவும் அழகுற
எழுதுதலும்.
12. இமையோர்
தொழும் வேதனை (பதி.149-3.) என்புழி இமையோர்
தேவர் என்று பொருள் கூறல் சைவ நூல்களுக்குப் பொருந்தாது.
கண்ணிமைத்துக் காணாத யோகியர், விழித்தகண் குருடாத்திரிவீரர்
என்பதே உண்மைப் பொருள் என்று தெளிவுறுத்தலும்.
13. கண்ணனும்
நான்முகனுங் காணா விண்ணினை என்புழி
(பதி.150-9.) விண் திருச்சிற்றம்பலம் என்று எழுதுதலும்.
14. மரியார்-திருவடி
வழிபாட்டால் பிறவி நீங்கியவர் (ஜீவன்முக்தர்)
என்று எழுதுதலும் (பதி.154-9.)
15. தடுமாறு,
வல்லாய் தலைவா! மதியம் (பதி.157-7) என்ற இடத்துத்
தடுமாறு வல்லாய் உயிர்கள் உன்னை உணர்வதில் தடுமாறுதலைச்
செய்யவல்லவனே என்றும், இச்சொல்லைத் தட்டுமாறுதல் என்பதன்
மரூஉவாகக்கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து நின்றது
எனலுமாம் எனப்புத்துரை காண்டலும்,
16. வண்டிரைமதிச்சடை
என்புழி (பதி.165-2) புனலில் உள்ள வளம்
பற்றியதாகவும், அலையின் வளம் பற்றியதாகவும் ஈருரை காண்டலும்,
17. புடங்கருள்
செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய் என்புழி
(பதி.166-9) புடம்+கருள்+செய்து எனப்பிரி்த்து இருள் மறைக்கப்பட்டாற்போல
அறியாமையால் மறைக்கப்பட்டு என்று புள்+தங்க+அருள்செய்து என்றும்
பிரித்தும் இரு புதுப்பொருள்
|