பக்கம் எண் :

68

காண்டலும்,

     18. ‘பருத்துருவதாகி விண் அடைந்தவன்’ என்புழி (பதி.159-9)
பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடி தேடினான் என்ற திருமுறைப்
பேருண்மையைச் செவ்விய முறைநின்று ஆதாரம் காட்டித்
தெளிவுறுத்தலும்,

     19. ‘நல்லார்பயில்காழி’ என்புழி (பதி.171-11) நல்லார் ஞானியர்
என்றுரைத்தலும்,

     20. ‘இது நன்கு இறைவைத்து அருள்செய்க’ என்புழி. (பதி.173-1)
பின்வருவன வினாக்களாதலின் அவற்றிற்குச் ‘செவ்வனிறையோ
இறைபயத்தலோ செய்க’ என்றருளினார் என்று புத்துரை காண்டலும்
‘இதற்குப் பிறர் இயையாது பொருள் உரைத்தார் என்பதும் இப்பொருள்
மிக்க மகிழ்ச்சி விளைவிப்பதும் ஈண்டு உணரத்தக்கன.

     21. தேங்கனி அரியதொரு சொல்வழக்கு என்றலும் (பதி.174-3)

     22. ‘ஏழைபங்காளன்’ என்பதற்கு உமையொருபாகன் என்பதே
பொருள் என்றும், வறியர் பங்கை ஆள்பவன் என்று கூறுதல் மாபாதகம்
என்று எழுதுதலும்,

     23. ‘தள்ளாய சம்பாதி’என்புழி (பதி.179-1) தாழ்ந்த பறவைகள்
எனக்கருதித் தள்ளி விடத்தகாகதது என்றும், தள்ளுதல் ஆனஎனப்
பொருள் எழுதுதலும்,

     24. ‘பிச்சை பிறர் பெய்யப் பின்சாரக் கோசாரக்’ என்புழி (பதி.
180-10) கோசார-தலைமை தன்னைப் பொருந்த என்றும், யானை சார
என்றும் sssபொருளெழுதுதலும்,

     25. ‘பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்’ (பதி.183-10)
என்புழிப் பெருஞ்சாந்தி என்பது பவித்திரோற்சவமே; கும்பாபிடேகம்
அன்று என்று புதுப்பொருள் உரைத்தலும், 26.‘கொழுநற் றொழுதெழுவாள்’
என்புழி (பதி.188-5) படுக்கையின் நின்று தொழுதுகொண்டே எழுதல்
செய்வாள் என்று