பக்கம் எண் :

583

1963.







கோலத்தார் கொன்றையான்
     கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான்
     நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும்
     நாலூர் மயானத்தில்
சூலத்தா னென்பார்பாற்
     சூழாவாந் தொல்வினையே.         4
1964.







கறையார் மணிமிடற்றான்
     காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான்
     பெண்பாக னண்பாய
நறையார் பொழில்புடைசூழ்
     நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க்
     கெய்துமா மின்பமே.              5


     4. பொ-ரை:அழகால் நிறைந்த கொன்றைமாலையைச் சூடியவன்,
கொல்லும் புலியினது தோலை ஆடையாக உடுத்தவன், நீலநிறம்
பொருந்திய கண்டத்தினன். நெற்றிக்கண்ணன், உலகோர் சென்று
பரவிப்புகழும் நாலூர் மயானத்தில் விளங்கும் சூலத்தினன் என்பாரைத்
தொல்வினை சூழா.

     கு-ரை:கோலத்து ஆர்-அழகால் நிறைந்த. நீலத்து ஆர்-நீலத்தைப்
பொருந்திய. தொல்வினை-சஞ்சிதம். வினை சூழாவாம் என்க.

     5. பொ-ரை:விடக்கறை பொருந்திய நீலமணி போன்ற
மிடற்றினன். கையில் கபாலம் ஏந்தியவன். மழுஏந்தியவன். பிறை
வளரும் சடைமுடியினன். தன்பால் நட்புக்கொண்ட பெண்பாகன்.
தேன் பொருந்திய பொழில்கள் புடையே சூழ்ந்துள்ள நாலூர் மயானத்து
இறைவன் என்று அவனை ஏத்துபவர்க்கு இன்பம் வந்துறும். கு-ரை:
கறை-விஷக்கறை. மணி - நீலமணியை ஒக்கும். மிடறு-திருக்கழுத்து.
கட்டங்கன்-மழுவேந்தியவர். பெண்பாகன்-