1965.
|
கண்ணார்
நுதலான்
கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி
ஆடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான்
நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம்
நண்ணாதார் நன்னெறியே. 6 |
1966.
|
கண்பாவு
வேகத்தாற்
காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான்
நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள்
நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க்
கேலா விடர்தானே. 7 |
மங்கை பங்கன். ஏழைபங்காளன்
(திருவெம்பாவை) நறை-தேன்.
இறையான்-இறைவன். இன்பம் எய்துமாமென்க.
6.
பொ-ரை : கண்பொருந்திய நுதலினனும், கனலை ஆடும்
களமாகக் கொண்டவனும் பண்ணமைதியுடைய வேதங்களைப் பாடுவோனும்,
நடனம் ஆடும் பரஞ்சோதியும், பகைவருடைய முப்புரங்களை எய்தவனும்
ஆகிய சிவபெருமான் உறையும் நாலூர் மயானத்தை நண்ணாதவர் எல்லாம்
நன்னெறியைச் சாரார்.
கு-ரை:
ஆடு இடம் கனல் ஆக-ஆடுகின்ற இடம் நெருப்பாக.
தீயாடி, அனலாடி; இறைவன் ஆடலுக்குப் பாடல் பண்ணார் மறை.
நண்ணார்-பகைவர். நண்ணாதவர்-அடையாதவர், அணுகாதவர.்
நன்னெறி-சரியை, கிரியை யோகமென்னும் அழிவில்லாத தவத்தால் வரும்
ஞானம். (சிவஞான-சூ-8-உரை).
7.
பொ-ரை: நெற்றிக் கண்ணிலிருந்து பரவிய வெம்மை வேகத்தால்
மன்மதனைக் காய்ந்து உகந்தவனும், மாதொருபாகனும் யானைத் தோல்
போர்த்த மார்பினனும் ஆகிய சிவபெருமான் உறை
|