பக்கம் எண் :

585

1967.







பத்துத் தலையோனைப்
     பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து
     வாளோடு நாள்கொடுத்தான்
நத்தி னொலியோவா
     நாலூர் மயானத்தென்
அத்த னடிநினைவார்க்
     கல்ல லடையாவே.              8
1968.



மாலோடு நான்முகனும்
     நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா
     மேன்மையான் வேதங்கள்


வதும் நட்புக்குணம் அமைந்தோர் வாழ்வதுமான நாலூர் மயானத்தைத்
தியானிக்கும் சிந்தையை உடையார்க்கு இடர் வாரா.

     கு-ரை: பாவுதல்-பரவுதல். நாகம்-யானை. நண்- (நள்) நண்ணுதல்,
நள்ளுதலுமாகும். எண்-தியானம். இடர் ஏலா.

     8. பொ-ரை: பத்துத்தலைகளை உடைய இராவணனைப் பாதத்து
ஒரு விரலால் மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்து, பின் அவனுக்கு
வாளும் நாளும் கொடுத்தவனும், சங்கொலி முழங்கும் நாலூர் மயானத்தில்
விளங்கும் என் தலைவனுமான சிவபெருமான் திருவடிகளை நினைவாரை
அல்லல்கள் அடையா.

     கு-ரை: வாளோடு நாள்-வாளும், ஆயுளும். நத்து-சங்கு. அத்தன்-
பிதா. அத்தன்-அத்தை. ஆத்தன்-ஆத்தான் என்பவை தந்தை தாயரைக்
குறித்த பழைய வழக்கு. “ஆத்தானை அடியேன் தனக்கு என்றும்” (தி.7
பா.680) ‘அத்தை’ என்பது தாயைக் குறித்து இன்றும் வழங்குகிறது.
அல்லல்-துன்பங்கள்.

     9. பொ-ரை: திருமாலும் நான்முகனும் தேடிமேலொடு கீழ்
காணாவகையில் வளர் எரியாய் நின்ற மேன்மையாளனும் நான்கு
வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவனும் நாலூர்