பக்கம் எண் :

586

நாலோடு மாறங்கம்
     நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி
     பாதம் பணிவோமே.              9
1969.







துன்பாய மாசார்
     துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே
     புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா
     நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை
     யேத்துவார்க் கின்பமே.           10


மயானத்துப் பாலும் நெய்யும் ஆடி மகிழ்பவனும் ஆய எம்பெருமானின்
பாதங்களைப் பணிவோம்.

      கு-ரை: நேட-தேட. நாலுவேதம் ஆறு அங்கம். பாலோடு நெய்-
பாலும் நெய்யும்.

      10. பொ-ரை: துன்பமாகிய அழுக்குடையவர்களும், பழுப்பாகிய
போர்வையை அணிந்தவர்களுமான சமணபௌத்தர்களின் பொருளற்ற
பேச்சுக்களைக் கேளாது புண்ணியத்தின் வடிவாய் விளங்கும் பெருமானை
நட்போடு ‘சிவாய’ என்னும் மந்திரத்தைக் கூறி்க்கொண்டு நண்ணுங்கள்.
அப்பெருமான் நாலூர் மயானத்தில் இன்பவடிவினனாய் இருந்தருளுகின்றான்.
அவனை ஏத்துவார்க்கு இன்பம் விளையும்.

      கு-ரை: துன்பு ஆய-துன்பமாகிய. மாசு-அழுக்கு. ஆர்-நிறைந்த.
துவர் ஆய-பழுப்பாகிய. புன் பேச்சு-பொருளின்மையால் புல்லிய
பிதற்றுரைகள். புண்ணியனை-சிவபுண்ணிய சொரூபனை, “புண்ணியனைப்
பூசித்த புண்ணியத்தினாலே” (சிவஞானசித்தியார். சூ-8) நண்பு-செறிவு.
யோகம்- நட்பும் ஆம். இதிற்குறித்த திருவைந்தெழுத்து அதிசூக்கும
(காரண) பஞ்சாட்சரம். “விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்,
மண்ணினார் மறவாது சிவாய வென்று, எண்ணினார்க்கு இடமா
எழில்வானகம், பண்ணினாவர் பாலைத் துறையரே” (தி.5 ப.51 பா.6)
இன்பு - பேரின்பம்.