1970.
|
ஞாலம்
புகழ்காழி
ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோதும்
நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற்
சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத்
தின்பா யிருப்பாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை:
உலகம்புகழும் காழிப்பதியில் தோன்றிய ஞான
சம்பந்தன், நான்மறைகளை அந்தணர் ஓதும் நாலூர் மயானத்தில்
விளங்கும் பெருமானின் சீலத்தையும் புகழையும் போற்றிப்பாடிய
இப்பதிகத்தைச் சிறந்தமுறையில் ஓதிவழிபட வல்லவர்க்கு உயரிய புகழ்
கூடும். வான் உலகில் இன்பம் ஆர்ந்து இருத்தல் இயலும்.
கு-ரை:
ஞாலம் - உலகம். சீலம் - சிவபெருமானுடைய சீலத்தை.
ஒழுக்கத்தாலும் புகழாலும் எனலும் பொருந்தும், ஏலும் - இயலும்.
ஏற்குமெனலுமாம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
பாடும்அர
தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.
-சேக்கிழார்.
|
|