பக்கம் எண் :

589

1972.



மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.   2
1973.



வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.      3


கபாலீச்சரம். ஒட்டிட்ட பண்பு-அத்துவிதக் கலப்பு. ‘உணரப் படுவாரோடு
ஒட்டிவாழ்தி’ ‘ஒட்டியவனுளமாகில்லான்’. ‘உருத்திர பல்கணத்தார்-மாகேசுரர்;
அடியவர். மதிசூடும் அண்ணலாரடியார் தமை அமுது செய்வித்தல்,
கண்ணினால் அவர் ‘நல்விழாப்பொலிவு கண்டார்தல்’. அட்டு-திருவமுது
அமைத்து. இட்டல்-இடுதல். (நட்டல்-நடுதல் போல) இதிற் குறித்த திருவிழா.
பூரட்டாதியில் நிகழ்வது. இத் திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும்
திருவிழாச்சிறப்பு மேல் வரும் பாக்களிற் குறிக்கப்பட்டமை உணர்க.
போதியோ-போவாயோ? வருவாய் என்றவாறு.

     2. பொ-ரை: பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை
உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும்
கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள
பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர்
அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

     கு-ரை: மை-கண்ணிற்கிடும் மை, கைப்பயந்த நீறு-கைமேற்
பயன்தந்த திருநீறு. வழிபடுவார் கையில் அர்ச்சகர் வடிவாயிருந்து
கொடுத்த திருநீற்றினன். திருநீறு வடிவாயுள்ளானெனலும் சிறந்ததே,
‘கைப்பூசு நீற்றான்’, (பா.5) ஐப்பசித் திருவோண விழாச் சிறப்பும்
அரியதவத்தோர்களாகிய அடியார்கள் திருவமுது செய்த காட்சியும்
குறிக்கப்பட்டன. ஓணத்திற் கொடியேற்றம். கிருத்திகையில் தீர்த்தவாரி.
தலவரலாறு காண்க. இராமர் வழிபாடு, ஓணம் திருமாலின் நாள்.

     3. பொ-ரை: பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர்
வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும்,
தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும்