பக்கம் எண் :

590

1974.



ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 4
1975.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்


பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது
சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக்
கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

     கு-ரை: வளை-வளையல். மறுகு-தெரு. வண்மை-தெருவினர்
கொடைவளம். துளக்கு-அசைவு. தளர்வு, வருத்தம். இல்-இல்லாத.
இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக்
குறித்தால் அசைவில்லாத, தளர் வில்லாத என்க. தளத்து-சாந்தினை.
கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத்
திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும்
சிவாகம புராணங்களிலும் உணர்க.

     4. பொ-ரை: பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும்
கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக்
கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த
சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும்
பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது
செல்வது முறையோ?

     கு-ரை: ஊர் திரை வேலை-ஊருந்திரையுடைய கடல். ஊர்தல்-
மேற்படுதல். பரத்தல். வல்லார்-(நெய்தல் நிலமாக்கள்) வேலால் கடல்
மீன்களைக் கொல்லவல்லவர்கள். கொற்றம்-கொன்று அடையும் வெற்றி.
கார்-மேகம். ஆர்திரைநாள்-திருவாதிரை என்னும் மீன். எதுகை நோக்கின்,
‘ஆர்திரை’ என்றதே உண்மைப் பாடம் ஆகும். ’ஆர்திரையான்,
ஆர்திரையான் என்றென் றயருமால் ஊர்திரை வேலியுலகு’ என்னும்
முத்தொள்ளாயிர முதற்செய்யுளமைதியை உணர்க. இது மார்கழித்
திருவாதிரை விழாச் சிறப்புணர்த்திற்று.

     5. பொ-ரை: பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைத் கண்களை உடைய
இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம்