பக்கம் எண் :

591

நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.       5
1976.



மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.        6

என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு
அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக்
கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ?

     கு-ரை: ‘மைப்பயந்த வொண்கண்’ கைப்பயந்தநீற்றான். (பா-2)
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல்-நெய்யால் மறைக்கப்பட்ட ஒள்ளியசோறு.
அடியார், வறியர் முதலோர்க்கு அளிக்கும் தைப்பூச விழாச் சிறப்பு இதில்
குறிக்கப்பட்டது.

     6. பொ-ரை: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள்
மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு
கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை
பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி
அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

     கு-ரை: தென்னையின் மடல் நீட்சியுடைமைபற்றி, ‘மடல் ஆர்ந்த
தெங்கு’ எனப்பட்டது. மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்ந்தவுண்மை
குறிக்கப்பட்டது. அடல்-வலிமை. ஆனேறு - விடை. நடம் ஆடல்-
கூத்தாடுதல்; உலாவுதலுமாம்.

     பரவி-வாழ்த்தி, மாசிக் கடலாட்டுச் சிறப்புணர்த்தியது. ‘சேயிழையார்
நடம்பயிலுந் திருவையாறு’. ‘பண்ணினேர் மொழி மங்கைமார் பலர்
பாடியாடிய வோசை. . . பொலியும். . . காழி’. ‘பாலினேர் மொழி
மங்கைமார் நடமாடி இன்னிசைபாட.’ எனப்பின் வருதல் அறிக. (ப.185-186)