2016.
|
தோளின்
மேலொளி நீறு தாங்கிய
தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந்
தவமல்கு திருக்களருள்
வேளி னேர்விச யற்க ருள்புரி
வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே
அடைந்தார்க் கருளாயே. 5 |
2017.
|
பாட
வல்லநன் மைந்த ரோடு
பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ்
செழுமாடத் திருக்களருள் |
2.
பொ-ரை:
தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள்
அடிபோற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த்
திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு
அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக்
கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.
கு-ரை:
தோளின். . . . நீறு-திரள் தோள்மேல் நீறு நின்றது
கண்டனை ஆயினும் நெக்கிலை (திருவாசகம், திருச்சதகம், 33)
அங்குச் சிவபிரான் தோள். இங்குச் சிவதொண்டர் தோள், சாந்தம்
ஈதென்று எம்பெருமான் அணிந்த நீறுகொண்டார் இடர்களையாய்
நெடுங்களமேயவனே என்றதால், உடையானுக்கு ஏற்றது அடியார்க்கும்
ஆதல் அறிக.
மிண்டிய-நெருங்கிய.
தாளினார் - திருவடியுடைய சிவபிரான்.
வேளின் நேர்-முருகனைப் போன்ற. விசயன்-அருச்சுனன். சிவவேடனிடம்
தோற்றுச் சயம் நீங்கியவன். விசயன்-மேலான வெற்றியன் என்பது,
அவன்பெற்ற பிறவெற்றிகளைக் குறித்தது. வித்தகா-ஞான வடிவா!
ஆள்-அடிமையாக. உகந்தவனே-விரும்பிக்கொண்ட (ஆண்ட) வனே!
3. பொ-ரை:
பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும்
உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாட
|