பக்கம் எண் :

622

நீட வல்ல நிமல னேயடி
     நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே
     அடைந்தார்க் கருளாயே            3
2018.







அம்பி னேர்தடங் கண்ணி னாருடன்
     ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொ னார் பொழில்
     சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா
     விணையடி போற்றி நின்றவர்க்
கன்பு செய்தவனே
     அடைந்தார்க் கருளாயே.           4


வீடுகளைக் கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள
நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே!
உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.

     கு-ரை: மைந்தர்-மக்கள். சேடர்-பெரியோர். நிமலன்-மலமில்லாதவன்.
அடி நிரைகழல் சிலம்பு ஆர்க்க மாநடம் ஆட வல்லவனே-திருவடிகளில்
வரிசையாகக் கழலும் சிலம்பும் ஒலிக்க மகாதாண்டவம் ஆடவல்ல
பெருமானே!

     4. பொ-ரை: வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய
மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாட மாளிகைகளோடு
பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட
மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி
நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்
புரிவாயாக.

     கு-ரை: அம்பு-வாள். தடங்கண்-விசாலாட்சம். திருக்களரிலுள்ள
ஆடவர் மகளிர் பன்மையும், மாளிகைச் சிறப்பும், செல்வப் பெருக்கும்,
வளமிகுதியும் குறித்தார். ‘எம் இறைவா’ என்று வாயாரப் பாடி,
இணையடிபோற்றி நின்றவர்கண் இறைவன் அன்பு செய்தருள்வான்
என்ற உண்மையை அறிவித்தவாறு.