2021.
|
தம்ப
லம்மறி யாத வர்மதில்
தாங்கு மால்வரை யாலழ லெழத்
திண்பலங் கெடுத்தாய்
திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி
வானவர் தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய்
அடைந்தார்க் கருளாயே. 7 |
கு-ரை:
கோலம்-அழகு. ஆல-தோகைவிரித்து ஆடி அசைய.
கொண்டல்கள்-மேகங்கள். சேல், கயல் இரண்டும் மீன்வகை. நீலம்-
நீலநிறத்தை.
மேவிய-பொருந்திய.
நஞ்சாலானநிறம். பொலி-விளங்குகின்ற. ஆல
நீழலுளாய்-தக்ஷிணாமூர்த்தியாகிய குருநாதரை விளித்தது.
7. பொ-ரை:
தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின்
முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல்
எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே!
திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத் தூவி வானவர் நின்
திருவடிகளைப் போற்றப் பேரம்பலத்தில் உறையும் பெருமானாய்
விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
கு-ரை:
தம் பலம்-தமது வலிமையை. அறியாதவர்-தெரிந்துணராத
அசுரர். தாங்கும் மால்வரை-உலகத்தை அச்சாக நின்று தாங்கும் பெரிய
மேருமலை. திண்பலம்-திண்ணிதாகிய வலிமையை. பலம்-பயனுமாம்.
வம்பு-மணம்.
அலர்-பரந்த. பேரம்பலத்து உறைவாய்-பேரம்பலத்தில்
(கூத்து உகந்து) உறைபவரே! சிற்றம்பலம் பேரம்பலம் என்பவை இரண்டும்
சித்சபையே ஆகும்; சிதம்பரம், சிதாகாசம் என்பவற்றின் பொருள்
ஞானவெளி என்பது. ஞானவெளி, ஞானசபை இரண்டும் பொருளால் ஒன்றே.
அம்பலத்தின் அடை மொழியாகிய சிறுமை பெருமைகளை நோக்கின்,
சிற்றம்பலம் என்பது வடசொற்றொடரின் திரிபாகாது எனல் புலப்படும்.
|