பக்கம் எண் :

625

2022.







குன்ற டுத்தநன் மாளி கைக்கொடி
     மாட நீடுயர் கோபு ரங்கண் மேல்
சென்ற டுத்துயர்வான்
     மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
     தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய்
     அடைந்தார்க் கருளாயே.        8
2023.







பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
     பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணி லாமதியம்
     பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு
     வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ண லாயவெம்மான்
     அடைந்தார்க் கருளாயே.        9


     8. பொ-ரை: மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட
கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து
மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள்,
நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட
தோள் வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று
அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை
அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.

     கு-ரை: தம்மேலுள்ள கொடிகள், கோபுரங்களின் மேற்போய்,
சந்திரனைத் தோயும் அளவு, மாளிகைகள் உயர்ந்துள்ளன. ‘வண்
கொண்டல் விட்டு மதிமுட்டு வனமாடம்’. வரை-கயிலை மலையை.
எடுத்தான்தன்-எடுத்த இராவணனுடைய. அன்று-எடுத்த அந்நாளில்.

     9. பொ-ரை: யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர்
பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தெளிந்த நிலவைத் தரும்
மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும்