2024.
|
பாக்கி
யம்பல செய்த பத்தர்கள்
பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார்
சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண்
தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே
யடைந்தார்க் கருளாயே. 10 |
2025.
|
இந்து
வந்தெழு மாட வீதியெ
ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார்
அவர்சேருந் திருக்களருள் |
ஆலயத்துள் எழுந்தருளிய
ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி,
திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின்
திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.
கு-ரை:
பண்+யாழ்=பண்ணியாழ். யாழைத் திருந்திய சுரம்
அமையப்பண்ணி எனலுமாம். ஆர-நிறைய. பதியாகிய திருக்களருள். உள்
திருக்கோயிலின் மூலத்தானத்தில், அன்பர் உள்ளத்தில். கழல் காட்சி-சீபாத
சேவையை (அருளாய்).
10.
பொ-ரை: நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள்
பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும்
இயல்பினரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள்
வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும்
உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்கு பவனே! அடைந்தார்க்கு
அருள்புரிவாயாக.
கு-ரை:
பாக்கியம்-நல்வினைகள். பத்தர்கள்-அன்பர்கள். பணிகள் -
திருப்பணிகள். தீக்கு இயல்-அக்கிநி காரியத்துக்கு.
11.
பொ-ரை: திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக்
கொண்ட
வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய
ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி
|