|
அந்தி
யன்னதொர் மேனி யானை
அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன் சொல்லிவை
பத்தும்பாடத் தவமாமே. 11 |
திருச்சிற்றம்பலம்
பேசும் மகளிர் பலர்
வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற
செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள்
பத்தையும் பாடத் தவம் சித்திக்கும்.
கு-ரை:
இந்து-சந்திரன். எழில்-அழகு. செந்து-முன் பதிகம் மூன்றில்
உள்ள விளக்கம் காண்க. அந்தி வண்ணன்.
திருஞானசம்பந்தர்
புராணம்
மற்றவ்வூர்
தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
மாலயனுக் கரிய பிரான் மருவுந் தானம்
பற்பலவுஞ் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவுஞ் சென்று போற்றித்
திருமறைக்காட் டதன்மருங்கு சேர்ந்தார் அன்றே.
-சேக்கிழார்.
|
|