2027.
|
நின்று
மேய்ந்து நினைந்து மாகரி
நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றி னேர்ந்துகுத்திப்
பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல்
ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார்
புகழார்ந்த புண்ணியரே. 2 |
2028.
|
விரவி
நாளும் விழா விடைப்பொலி
தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவ மாரு
நீழற்பொழின்மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடை யானை யுள்கிநின்
றாத ரித்துமுன் அன்பு செய்தடி
பரவு மாறுவல்
லார்பழிபற் றறுப்பாரே. 3 |
2.
பொ-ரை: பெரிய யானை நின்று மேய்ந்து நினைந்து
நீர்
மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து,
மேகங்களைக் குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் நிலை
பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர்
அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.
கு-ரை:
மாகரி-பெரியயானை, கரத்தையுடையது கரி. வான்
மழை-மேகத்திலுள்ள மழைநீரை, நேர்ந்து-நேர்பட்டு. உகுத்தி-உகச்செய்து.
(அபிடேகித்து). ஏர்ந்து-எழுந்து, குத்தி எனலுமாம். பணி-தொண்டு.
மன்னிய-நிலைபெற்றுள்ள. வான்-தேவருலகம். பொன்றும் ஆறு-சாமாறு,
(பிறந்திறந்துழலும் துன்பவழி). சாமாறே விரைகின்றேன் (திருவாசகம்,
திருச்சதகம். 14) ஆர்ந்த-நிறைந்த.
3. பொ-ரை:
நாள்தோறும் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு
பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில்
நீழலில் அமைந்த கோட்டாற்றி்ல் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட
சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும்
பற்றும் நீங்கப் பெறுவர்.
|