பக்கம் எண் :

630

2029.







அம்பி னேர்விழி மங்கை மார்பலர்
     ஆட கம்பெறு மாட மாளிகைக்
கொம்பி னேர்துகி
     லின்கொடியாடு கோட்டாற்றில்
நம் பனேநட னேந லந்திகழ்
     நாதனே யென்று காதல் செய்தவர்
தம்பி னேர்ந்தறி
     யார்தடுமாற் றவல்வினையே.          4
2030.



பழைய தம்மடி யார்து திசெயப்
     பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
குழலு மொந்தை
     விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்


     கு-ரை: வியந்து-நன்குமதித்து, புகழ்ந்து. குரவம்-குராமரம். ‘நிழல்’
என்ற பாடமே சந்தத்திற்குப் பொருந்துவது. (பதி. 186 பா.6) அரவம்-பாம்பு.
பரவும் ஆறு-வாழ்த்து முறைமை. பழி பற்று-பழியும் பற்றும், பழிக்கும் பற்று
எனலுமாம்.

     4. பொ-ரை: அம்புபோன்ற விழியை உடைய மங்கையர்
ஆடுமிடமாகக் கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய
துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம்
புரிபவனே! நன்மைகள் பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர்,
தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள் வருவதை அறியார்.

     கு-ரை: அம்பு-வேல். (முற்பதிகம். பா.4) ஆடு அகம்-ஆடுகின்ற
இடம். கொம்பின் ஏர் துகிலின் கொடி-கொம்பிற் கோத்து எழுகின்ற
துணிக்கொடி. நேர் என்றும் பிரிக்கலாம். நடனே-கூத்தனே. (பதி. 185
பா.11. ‘நயன் நடன்’) நலம்-பேரின்பம். தம்பின் தடுமாற்ற வல்வினையே
நேர்ந்து அறியார் என்றியைக்க. செய்தவர் எழுவாய், அறியார் பயனிலை.
நேர்தல் வினையின் செயலாகும்.

     5. பொ-ரை: பழமையான தம் அடியவர் துதிசெய்யவும்,
மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை முதலியன
விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும்
ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று
சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.