|
கழலும்
வண்சிலம் பும்மொ லிசெயக்
கானி டைக்கண மேத்த வாடிய
அழக னென்றெழுவார்
அணியாவர் வானவர்க்கே. 5 |
2031.
|
பஞ்சின்
மெல்லடி மாத ராடவர்
பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி யின்மொழியால்
தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச னேமணி யேம ணிமிடற்
றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
துஞ்சு மாறறியார்
பிறவாரித் தொன்னிலத்தே. 6 |
கு-ரை:
பழைய அடியார். பழவடியீர் பண்டைப்பரிசே பழ
வடியார்க்கு ஈந்தருளும் அண்டம். பழவடியார் கூட்டம் அடியேன்
காண ஆசைப்பட்டேன். பழிப்பு இல் நின்பாதப் பழந் தொழும்பு.
(திருவாசகம் 157, 183, 424, 151) பார்-மண். குழல்-வேய்ங்குழல். மொந்தை-
இசைக்கருவியுள் ஒன்று. கழலும் சிலம்பும் ஒலி செய்ய என்க. கான்-காடு.
கணம்-பூதகணம். பேய்க்கணம். எழுவார்-நடுநாடியில், சிவபீஜத்தொடும்
சிந்தித்து எழுகின்ற யோகியர். சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி
எழுவார் உள்ளம் ஏயவன் காண் (தி.6 பதி.64 பா.4). இவ்வுண்மையை
ஒட்டித் தொழுதெழுவார் தொழு தெழுவாள் என்னுந் தொடர்கட்குப்
பொருள் கொள்ளல் நன்று. கொழு நற்றொழுதெழுவாள்-படுக்கையின்
நின்று தொழுது கொண்டே எழுதல் செய்வாள். தொழுதல் என்றதற்கு
விழுந்து வணங்குதல் என்னும் பொருளே உரியது என்பார். பிறவாறெல்லாம்
உரைப்பர். வானவர்க்கு அணி (பூஷணம்) ஆவர்.
6. பொ-ரை:
பஞ்சு போன்ற மெல்லிய அடிகளை உடைய மாதர்கள்,
ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை
நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே!
மணியே ! மணிமிடற்று அண்ணலே என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர்
இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.
கு-ரை:
பஞ்சின்பஞ்சுபோல. இன்-ஐந்தாவதனுருபு உவமப் இ119
|