2032.
|
கலவ
மாமயி லாளொர் பங்கனைக்
கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார்
குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர்ச டையுடை
நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின்
உயர்வாகுவ துண்மையதே. 7 |
பொருள். பன்+து என்றதன்
மரூஉ. பனுவல் என்பதற்கும் அதுவே பகுதி,
பஞ்சினைப்பன்னுதல் இன்றும் உண்டு. பஞ்சி தன் சொல்லே பனுவல்
இழையாக (நன்னூற்பாயிரம்) பருத்திப்பெண்டின் பனுவலன்ன (புறம்-125).
நுணங்கு-நுண்பனுவல் (நற்றிணை-353). (தொல்-எழுத்து-நச்சர்: இறை-சூ 1
-உரை). பத்தர்-அன்பர். சித்தர்-அட்டமாசித்து வல்லவர். வைகலும் -
நாள்தோறும். பண்பு-அவர்களுடைய குணங்களை. இன்மொழியால்
கொஞ்சித் தொழுதல் நிறைந்த கோட்டாறு. தொழில்-தொழுதல். மஞ்சன்-
மைந்தன் என்பதன் மரூஉ. கிஞ்சுகவாயஞ்சுகமே கேடில் பெருந்துறைக்
கோன் மஞ்சன் (திருவாசகம்-362) மஞ்சர்க்கும் மாதரார்க்கும்
மனமென்பதொன்றேயன்றோ (கம்பர்-பால-கோலங்-19). மணிமிடற்றண்ணலே
-திருநீலகண்டப்பெருமானே. துஞ்சும் ஆறு அறியார்-இனி இறக்கும்
வகையை அறியார். இத் தொல் நிலத்தே பிறவார் என்பதும், துஞ்சு
மாறறியாமை வலியுறுத்தி வீடுபெறுவரென்று விளக்கிற்று. நெகிழ்ந்தவர்-
எழுவாய்; அறியார் பிறவார் இரண்டும் பயனிலை.
7. பொ-ரை:
தோகையை உடைய மயில் போன்றவளாகிய
பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு
தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில வொளி
வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை
நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.
கு-ரை:
கலவம்-தோகை: மயிலாள்-மயில்போலும் சாயலுடைய
உமாதேவியார். கண்மிசை நீர் நெகிழ்த்து-கண்ணீர் உகுத்து. நிலவம்
-நிலாவைத்தரும். உன்னுவார்-தியானம் செய்பவர். வானவரின்-தேவரினும்.
உண்மையது-சத்தியமானது. ஆசிரியர் ஆணையிட்டுக் கூறுதலை நோக்கின்,
உயிர்களைச் சிவவழிபாட்டில் ஈடு
|